Categories
தேசிய செய்திகள்

வருகிற 4 தினங்களுக்கு 11 மாநிலங்களில்…. இந்திய வானிலை எச்சரிக்கை…..!!!!!

வருகிற 4 தினங்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்பஅலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை வெப்பஅலை நிலவும். இமாச்சபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில்  வருகிற ஏப்ரல் 18 வரை தற்போதைய வெப்ப அலை தொடர வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வருகிற 20ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வெப்பஅலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாநிலங்களில் வருகிற நாட்களில் இயல்பை விடவும் 3 -5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் வருகிற 5 நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலபிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்றே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளிலும் வருகிற 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |