பெண் ஒருவர் வருங்கால கணவரை தவறுதலாக தன் முன்னாள் காதலனின் பெயரை சொல்லி அழைத்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் உள்ள Ports Mouth என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் Keileigh Dunning (32) என்ற பெண் கீழே விழுந்து கிடப்பதையும் அவருக்கு அருகில் அவரின் வருங்கால கணவர் Mark Brand ford என்பவர் முதலுதவி செய்ய முயற்சிப்பதையும் கண்டுள்ளனர்.ஆனால் உடற்கூராய்வின் முடிவில் Keileighவின் பின்தலையில் படுகாயம் ஏற்பட்டிருப்பதும் மற்றும் அவரின் மண்டை ஓடு நொறுங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இரும்பு கம்பி ஒன்றால் பலமாகத் தாக்கப்பட்டு தான் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் இரும்பு கம்பி மற்றும் ஒரு ஸ்க்ரூடிரைவர் கிடைத்துள்ளது. மேலும் காவல்துறையினரின் விசாரணையில் Mark பணியாற்றிவரும் இடத்தில் இதேபோன்ற கம்பி ஒன்று காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது Mark இதற்கு முன்பு Tean என்று ஒருவரை காதலித்துள்ளார். அவரை பிரிந்த பின் தான் Mark யை காதலிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் Mark, தன் காதலை தெரிவிக்க திட்டமிட்டுருந்த அதே நாள் தான் Keileigh நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார்.
மேலும் அவர் அருகில் Mark ம் இருந்துள்ளார். அதோடு Keileigh கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் Keileigh, Mark ஐ அழைக்கையில் தவறுதலாக முன்னாள் காதலன் Tean பெயரைச்சொல்லி அழைத்ததாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த அன்றும் Keileigh, Mark ஐ நூடுல் என்று அழைத்துள்ளார். அதாவது நூடுல் என்பது முன்னாள் காதலர் Tean இன் செல்ல பெயராம். இதனால் ஆத்திரமடைந்த Mark, Keileigh யை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் அவரின் மண்டை உடைந்து உயிரிழந்திருக்கலாம் என்று முடிவானது. இதனைதொர்ந்து Mark கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.