பசுமை புரட்சி திட்டத்தின் முதற்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பசுமைப் புரட்சிக்கான திட்டங்களை இங்கிலாந்தில் நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 2030 ஆம் வருடம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த வருடம் நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மாற்று பாதையை எடுத்திருந்தாலும் நாம் நம் பொருளாதாரத்தை பசுமைப்புரட்சியுடன் இணைந்து தான் மீட்க வேண்டும். அடுத்த வருட கால நிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்காக நாங்கள் எதிர் பார்க்கையில் பசுமை தொழில்துறை புரட்சிக்கான ஒரு லட்சியத்தை நான் வகுத்துள்ளேன்.
இதனால் இது இங்கிலாந்தில் நாம் வாழும் முறையை மாற்றும். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுடைய வருங்கால சந்ததிகளுக்கு கொடுக்கப்போகும் பரிசாக நம் பூமியை பாதுகாக்க வேண்டும். இதன் முதல் படியாக வருகிற 2030 ஆம் வருடம் முதல் பெட்ரோல்,டீசல் கார் மற்றும் இதர வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். இதன்மூலம் சாலை போக்குவரத்து கார்பன் வாயு அளவை குறைந்த “ஜி7” நாடாக இங்கிலாந்து திகழும் என்று கூறியுள்ளார்.