இன்னும் சற்று நேரத்தில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அதிமுக தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர்.துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமைச் செயலகத்தில் நுழைந்தவுடன் முன்னதாக எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளை தொட்டு வணங்கி மரியாதையை செலுத்தினார்.எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் வருங்கால முதல்வரே என முழக்கமிட்டபடி ஆரவாரம் செய்தனர்.தலைமைச்செயலகத்திற்குள் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
Categories