வருங்கால முதல்வரே என்று போஸ்டர் ஓட்டினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகனான மு.க அழகிரி மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் திமுகவினர் இருக்கின்றனர். மேலும் அழகிரியை எப்படியாவது பாஜகவில் சேர்த்து விட வேண்டும் என்று பாஜக தரப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மு.க அழகிரி, “கருணாநிதிக்கு பிறகு நீ தான் எல்லாமே என்று ஸ்டாலினிடம் நான் கூறினேன். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கிடைக்க நான் தான் கருணாநிதியிடம் பரிந்துரைத்தேன். ஆனால் நான் என்ன தவறு செய்தேன். எதற்காக என்னை திமுகவிலிருந்து நீக்கினார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள். “வருங்கால முதல்வரே “என போஸ்டர் ஒட்டப்பட்டாலும் அது நிச்சயம் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.