Categories
தேசிய செய்திகள்

வருங்கால வைப்பு நிதி… பிப்ரவரி மாதத்தில் மட்டும்… எத்தனை பேர் தெரியுமா…?

பிப்ரவரி மாதத்தில் மட்டும் வருங்கால வைப்பு நிதியில் 14 லட்சம் பேர் சேர்ந்திருப்பதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த பிப்ரவரி மாதத்தில் 14,12,000 நிகர சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்திருப்பதையும், வேலைவாய்ப்பு பெருகி இருப்பதையும் இது காட்டுவதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 9 லட்சத்து 52 ஆயிரம் சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர்.அதில் பெண்கள் மட்டும் 3,10,000 ஆவர்.

Categories

Tech |