வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் வசனங்கள் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் ஜெய் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பொன்ராம் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தை முதன்முதலில் நடிகர் ஜெய்யிடம் கூறியதாகவும் ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சீரியஸாக அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்ததால் சீரியஸான காட்சியை மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.