நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை நம்முடைய எதிர்காலத்திற்கு தேவையாக சேமித்து வைக்க, நம்முடைய கையிருப்பாக இருக்கும் பணத்தை வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் செய்து வருகிறோம். இதன் மூலமாக ஓரளவு வருமானத்தை பெற முடியும். இதனால் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்கின்றனர். இதன் மூலமாக குறைந்த காலத்தில் குறிப்பிட்ட தொகையை பெற முடியும். இந்நிலையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் சில ஏழு முதல் பத்து வருடங்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. எனவே பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேருவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.
ஆக்சிஸ் வங்கி:
7 நாள் முதல் 29 நாள் வரை – 2.50%
30 நாள் முதல் 3 மாதம் வரை – 3%
3 மாதம் முதல் 4 மாதம் வரை – 3.5%
11 மாதம் 25 நாள் முதல் 1 வருடம் 5 நாள் வரை – 5.15%
1 வருடம் 5 நாள் முதல் 18 மாதம் வரை – 5.10%
2 வருடம் முதல் 30 மாதம் வரை – 5.40%
3 வருடம் முதல் 5 வருடம் வரை – 5.40%
5 வருடம் முதல் 10 வருடம் வரை – 5.50%
ஐசிஐசி வங்கி:
7 நாள் முதல் 14 நாள் வரை – 2.50%
15 நாள் முதல் 29 நாள் வரை – 2.50%
121 நாள் முதல் 184 நாள் வரை – 3.5%
290 நாள் முதல் 1 வருடம் வரை – 4.40%
1 வருடம் 389 நாள் வரை – 4.9%
3 வருடம் முதல் 5 வருடம் வரை – 5.35%
5 வருடம் முதல் 10 வருடம் வரை – 5.50%
எஸ்பிஐ வங்கி:
7 நாள் முதல் 45 நாள் வரை – 2.9%
46 நாள் முதல் 179 நாள் வரை – 3.9%
180 நாள் முதல் 210 நாள் வரை – 4.4%
211 நாள் முதல் 1 வருடம் வரை – 4.4%
1 வருடம் முதல் 2 வருடம் வரை – 5%
2 வருடம் முதல் 3 வருடம் வரை – 5.1%
3 வருடம் முதல் 5 வருடம் வரை – 5.3%
5 வருடம் முதல் 10 வருடம் வரை – 5.4%