Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வருமானவரித்துறை அதிகாரி போல நடித்த நபர்…. சுதாரித்து கொண்ட சார் பதிவாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணன் பணியில் இருந்த போது அதிகாரி போல உடை அணிந்து வந்த ஒருவர் நான் வருமானவரித்துறை அதிகாரி என கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணன் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கு குமார் என்பது தெரியவந்தது. இவர் வருமானவரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பது போல போலியான அடையாள அட்டையை தயாரித்து பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் சங்கு குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |