கோவையில் சந்திர சேகர் என்பவர் வசிக்கிறார். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளராக உள்ளார். இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6 ஆம் தேதி இவர் வீடு மற்றும் சகோதரர், சகோதரி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். 5 வது நாளாக கே.சி.பி. நிறுவனம், ஆலயம் அறக்கட்டையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உதவியாளர் சந்தோஷின் தம்பியான இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர். அப்போது, தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கமானவர் வீடு மற்றும் அலுவலர்களில் சோதனை நடைபெற்றது. இதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் மற்றும் அமைச்சர் வேலுமணி வீடுகளில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர்.