Categories
மாநில செய்திகள்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31 …!!

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நவம்பர் 30-ஆம் தேதி வரை காலக்கெடு விதித்து இருந்த நிலையில் அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வருமான வரி செலுத்துவோரின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தபட்டு அதன் பின்னர் ரெட்டன் செலுத்துவதாக இருந்தால் அதற்கான காலக்கெடு 2021 ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரி செலுத்துவோர் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்ததை தொடர்து வரி விதிப்பு சட்டங்களில் தளர்வு அளிக்கும் அவசர சட்டம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பல்வேறு கணக்குத் தணிக்கையாளர்கள், தணிக்கையாளர் அமைப்புகள் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை நவம்பருக்கு பின்பும் நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். ஏற்கனவே நவம்பர் 30-ஆம் தேதி வரை நீடித்த நிலையில் தற்போது டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |