Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரிதுறை அதிகாரிகள் போல நடித்து…. ஊழியர்களிடம் ரூ. 68 லட்சம் பறித்த கும்பல்…. போலீஸ் வலைவீச்சு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் விஸ்வநாதன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சுபானி(25), அலிகான்(25) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் விஸ்வநாதன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் ஆர்டர் கொடுத்த நகைகளை வாங்கி வருமாறு சுபானி மற்றும் அலிகானிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் பேருந்து மூலம் மாதவரத்திற்கு வந்தனர். இதனையடுத்து கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் இருக்கும் உறவினர்களை பார்த்துவிட்டு சவுகார்பேட்டைக்கு செல்லலாம் என அலிகான் தெரிவித்தார். இதனால் இருவரும் ஆட்டோவில் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த நான்கு பேர் ஆட்டோவை வழிமறித்து நாங்கள் வருமான வரி அதிகாரிகள் என தெரிவித்தனர். இதனையடுத்து அலிக்காணை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு அந்த நபர்கள் பணத்தையும் பறித்தனர். சிறிது தூரம் சென்றவுடன் காரில் இருந்து அலிக்கானை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றி விசுவநாதனுக்கு அலிகான் தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |