Categories
தேசிய செய்திகள்

வருமான வரித் தாக்கல்…. இனி மொபைலில் ஈசியா செய்யலாம்….. இதோ முழு விவரம்….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதியே கடைசி நாளாகும். எனவே வருமான வரி செலுத்துவோர் தேவையில்லாத அபராதத்தை தவிர்க்க கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது. முன்பெல்லாம் வருமான வரி தாக்கல் செய்வது சிரமமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் மிக எளிதில் ஆன்லைன் மூலமாகவே வருமான வரி தாக்கல் செய்யலாம்.

அதிலும் குறிப்பாக எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் சுலபமாக மொபைலில் இருந்து வருமான வரி தாக்கல் செய்யலாம் அதாவது எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலமாக மிக எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்.

  • முதலில் உங்கள் மொபைலில் SBI YONO ஆப் டவுன்லோடு செய்து உள்ளே நுழையவும்.
  • ஆப்பில் உள்ள Shop and Order பகுதிக்கு செல்லவும்.
  • அதில் உள்ள Tax and Investment பகுதியை கிளிக் செய்யவும்.
  • Tax2Win கிளிக் செய்யவும்.
  • அதில் 199 ரூபாய் கட்டணம் செலுத்தினால் CA உதவியுடன் வருமான வரித் தாக்கல் செய்துவிடலாம்.

Categories

Tech |