ஆன்லைன் மூலமாக வருமான வரி எப்படி செலுத்துவது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் வரையில் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். அதனால் மக்களின் கோரிக்கைக்கு இணங்க வருமான வரி அலுவலகம் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியை, அபராதம் என்று கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இன்று கணக்கு தாக்கல் செய்யாத 5 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர் 10 ஆயிரம் அபராதம் செலுத்தி நாளை முதல் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இன்று தாக்கல் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நாளை பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.
ஆன்லைன் மூலம் செலுத்துவது எப்படி?
ஆன்லைன் மூலம் வருமான வரியை செலுத்துவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். உங்களுடயை வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதால் ஏராளமான பயன்கள் உள்ளன. நீங்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க தேவையில்லை, அல்லது செக்கை நிரப்பத் தேவையில்லை அல்லது 4 சலான்களை நிரப்ப தேவையில்லை. இவற்றிலிருந்து தப்பிக்க எவ்வாறு ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்தலாம் என்று பார்ப்போம்.
வரி செலுத்த வேண்டிய முறைகள்
1. வங்கியின் நெட் பேங்கிங் கணக்கிற்கு செல்ல வேண்டும்.
2. www.incometaxindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பே டாக்சஸ் ஆன்லைன் என்ற ஐகனை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதில் வரும் சலானை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்பதற்கான உதவிகளும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
4. பின் வருமான வரியை செலுத்த வேண்டும்.
5. வருமான வரியை செலுத்தியவுடன் உடனடியாக அதற்கான ரசீது அதாவது கவுன்டர்ஃபாயில், சிஐஎன்-னோடு (சலான் ஐடன்டிபிகேஷன் நம்பர்) திரையில் வரும்.
6. சிஐஎன்- எண்ணை வரி தாக்கல் செய்யும்போது குறிப்பிட வேண்டும்.
6. கவுன்டர்ஃபாயிலை பிரிண்ட் செய்து கொள்ள வேண்டும் மேலும் கம்யூட்டரில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
7. நாம் செலுத்திய தொகை டாக்ஸ் இன்பர்மேசன் நெட்வொர்க்கை சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வருமான வரி செலுத்த எந்த அலுவலகத்தையும் தேடி இனி அலைவேண்டியதில்லை. கீழே உள்ள லிங்க் மூலம் ஃபோன் பே செயலியை பதிவிறக்கம் செய்து, நீங்கள் இருந்த இடத்திலேயே சில நிமிடங்களில் பணத்தைக் கட்டலாம். கீழேயுள்ள லின்ங்கைக் கிளிக் செய்து இப்போதே ஃபோன்பேவைப் டவுன்லோட் செய்யலாம்.
https://affilienet.o18.click/c?o=8859572&m=187&a=140691&aff_click_id={clickid}&source={pubid}