2021- 22 ஆம் ஆண்டிற்கான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 10ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் அறிக்கை வெளியிட்டுள்ளன அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” எனக்கூறப்பட்டுள்ளது.