வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
வருமான வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, கடந்த ஆண்டுகளில் நடந்தது போல் இந்த ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இன்ஃபோசிஸ் உருவாக்கிய இ-ஃபைலிங் போர்டல் இன்னும் சில தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வருவதாகவும், அதனால் இயல்பு நிலை இல்லை என்றும் வருமான வரித்துறை சமீபத்தில் ட்வீட் செய்திருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அறிக்கையின்படி, இதுவரை 10% வரி செலுத்துவோர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அப்படியானால், வருமான வரித்துறை ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக, வருமான வரித்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இந்த முறையும் ரிட்டர்ன் சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால், இது தொடர்பான எந்த உத்தரவையும், தகவல்களையும் வருமான வரி துறை இதுவரை வெளியிடவில்லை. இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2022 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தொற்றுநோயைத் தவிர, போர்ட்டலில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.