வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என்று மத்திய அரசு திட்டமிட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் கடந்த நிதியாண்டு காண வருமானத்தை தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31ஆம் தேதி ஆகும். இந்நிலையில் நாளையுடன் வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைய உள்ளதால் ஆன்லைனில் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய பலரும் ஆறும் காட்டி வருகின்றனர்.
வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என இணையதளம் வாயிலாக பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலகெடுவை நீட்டிக்கும் திட்டம் இனி இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளையுடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000 ஆபராதம் என்றும் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.