இந்திய அஞ்சல் துறை இப்போது வரி செலுத்துவோருக்கு எளிதான தீர்வை வழங்கி வருகிறது. அதாவது தபால் நிலையத்தின் பொது சேவை மையங்களில் கவுண்டர்களில் வருமான வரி வருமானத்தை செலுத்தலாம் என அறிவித்துள்ளது. வரி செலுத்துவோர்கள் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தின் சி.எஸ்.சி கவுண்டரில் ஐ.டி.ஆர் சேவைகளை குறித்து தெரிந்துக்கொள்ள அணுகலாம் என்று இந்தியா போஸ்ட் ட்வீட் செய்துள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் ட்விட்டர் பக்கத்தில், “இப்போது வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய அதிக தூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் அருகிலுள்ள தபால் நிலைய சி.எஸ்.சி கவுண்டரில் (Post office CSC counter) வருமான வரி வருமான சேவைகளை நீங்கள் எளிதாகப் பெறலாம்.” எனத் தெரிவித்துள்ளது.
Citizen-Centric Services கீழ் குடிமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அஞ்சல் துறை (டிஓபி) மற்றும் பொது சேவை மையம் (சிஎஸ்சி) மின்-ஆளுமை சேவைகள் இந்தியா ஆகியவற்றுடன் தபால் அலுவலகங்களை இணைத்து, நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவதே நோக்கமாகும்.