வருமானவரி செலுத்துபவர்கள் வருமானம் வரி தாக்கல் செய்த பின் ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான காலவரம்பை வருமான வரித்துறை குறைத்திருக்கிறது. இந்த காலவரம்பு 120 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது. இத்தகவலை வருமானவரி செலுத்துபவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
ஐடிஆர் சரிபார்ப்பு தொடர்பான முக்கியமான அம்சங்கள்
# ஐடிஆர்-ன் ஈ வெரிபிகேஷன் ரிட்டர்ன் தாக்கல் செயல் முறையை நிறைவு செய்கிறது.
# ஐ.டி.ஆர்-ன் ஈ வெரிபிகேஷன் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யப்படாவிட்டால்,ஐ.டி.ஆர் செல்லாதவையாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுளது.
# இந்த அறிவிப்பு துவங்கும் தேதியில் (அல்லது) அதற்குப்பின் மின்னணு முறையில் ரிட்டர்ன் தரவை அனுப்பினால், மின்சரிபார்ப்பு (அல்லது) ஐடிஆர்-வி சமர்ப்பிப்பதற்கான காலவரம்பு தற்போது 30 நாட்களாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
# இதுவரையிலும் வருமானவரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல்செய்த பின் ஐ.டி.ஆர்-ஐ ஈ வெரிபிகேஷன் செய்தல் (அல்லது) ஐ.டி.ஆர்-விஐ அஞ்சல் வாயிலாக அனுப்புவதற்குரிய கால அவகாசமானது அது பதிவேற்றப்பட்ட நாளில் இருந்து 120தினங்களாக இருந்தது.
# ஐடிஆர்-ன் ஈ வெரிபிகேஷன் (அல்லது) ஐடிஆர்-வி -ன் ஹார்ட் காபியை 30 தினங்களுக்கு மேல் தபாலில் அனுப்பினால், ரிட்டர்ன் தாமதமாகவோ (அல்லது) குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டதாகவோ கருதப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
# ஐடிஆர்-வியை ஹார்ட் காப்பியாக அனுப்ப விரும்புவோர் “ஸ்பீட் போஸ்ட் ஒன்லி” எனும் வழக்கமான முகவரி வாயிலாக அனுப்பலாம்.
# முறையாக சான்று அளிக்கப்பட்ட ஐடிஆர்-வி ஸ்பீட் போஸ்ட் அனுப்பப்பட்ட தேதியானது, வருமானவரி அறிக்கையை மின்னணு முறையில் அனுப்பிய நாளில் இருந்து 30 தினங்களுக்கு நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக கணக்கிடப்படும்.
# மார்ச் 31, 2022ல் முடிவடைந்த நிதி ஆண்டிற்கான கணக்குகளை இன்னும் தணிக்கை செய்யாத வரி செலுத்துவோர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 அன்று முடிவடைந்தது.
# ஜூலை 31ம் தேதி ஐடிஆர் தாக்கலுக்கான கடைசி நாளன்று, 72.42 லட்சம் வருமானவரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வருமானமானது 5.83 கோடியாக இருந்தது. இது தோராயமாக சென்ற வருடம் இருந்த அளவிலேயே இருந்தது.
# ஐடிஆர் வாயிலாக ஒரு நபர் அந்த வருடத்தில் வருமானம் செய்த பெரிய பண பரிமாற்றங்கள், கட்டணங்கள் குறித்த தகவல்களை வருமானவரித்துறைக்கு அளிக்க வேண்டும்.