வருடந்தோறும் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். அத்துடன் அந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை அவர் சமர்ப்பிக்கிறார். தற்போது புது வரி முறையிலும், பழைய வரி முறையிலும் எவ்வளவு வருமானத்திற்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். புது வரி விதிப்பின் படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனில், வருடத்திற்கு ரூபாய்.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், அதற்கு 20% வரி செலுத்த வேண்டும்.
பழைய வரிவிதிப்பு முறைப்படி வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் எனில், வருடத்திற்கு ரூபாய்.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை இருக்கும் வருமானத்திற்கு 20% வரி செலுத்தவேண்டும். இதனிடையில் இந்த முறை வரி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி ரூபாய்.5 லட்சம் வரையிலும் வருமானம் இருப்பவர்கள் வரிசெலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.