Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. கடைசி தேதி நீட்டிப்பு?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீடிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிப்பதற்கு அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஏனென்றால் பெரும்பாலான வருமான வரி ரிட்டன்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட்டு விடும். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி எப்போதும் போல நீட்டிக்கப்படும் என்று பலரும் கருதுகின்றனர்.

அதனால் மெதுவாக வருமான வரி தாக்கல் செய்கிறார்கள்.ஆனால் தற்போது தினமும் 15 முதல் 18 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. எனவே வரும் நாட்களில் தினமும் 25 லட்சம் முதல் 30 லட்சம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படும். கடந்த முறை கடைசி நாளில் 10 சதவீதம் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் இந்த முறை கடைசி நாளில் ஒரு கோடி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாது என்பதால் அதற்கு முன்பே வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.

Categories

Tech |