Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. கால அவகாசம் 30 நாட்களாக குறைப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

2021-2022ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் அதாவது ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்து விட்டது. ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் கடைசி நாள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை நீட்டிக்கப்படாமல் போய்விட்டது.

இந்நிலையில் வருமான வரி ரிட்டன் ஆன்லைன் வெரிஃபிகேஷன் அவகாசத்தை மத்திய அரசு 30 நாட்களாக குறைத்துள்ளது.இதற்கு முன்பு ஆன்லைன் வெரிஃபிகேஷன் கால அவகாசம் 120 நாட்களாக இருந்த நிலையில் தற்போது 30 நாட்களாக அது குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய நேரடி வரிகள் தெரிவித்துள்ளது. எனவே இனி முப்பது நாட்களுக்குள் வருமான வரி ரிட்டன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 30 நாட்களுக்கு மேல் ITR- V சமர்ப்பிக்க படாவிட்டால், இது சமர்ப்பிக்கப்படவே இல்லை என கருதப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |