நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது 2021-2022 வருடத்திற்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்-30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவகாசம் மே மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செப்-30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வரிப்பணத்தை எளிமையாக செலுத்தும் வகையில் புதிய இணையதளத்தை வருமானவரித் துறை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் மின்னணு முறையில் சந்தேகம் எழுப்புவது, ரீபண்ட் பெறுதல் உள்ளிட்ட வருமான வரித் துறை சார்பான அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். இந்த புதிய இணையதளம் www.incometax.gov.in ஜூன் 7-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.