Categories
அரசியல்

வருமான வரி யாரெல்லாம் செலுத்த வேண்டும்?…. இதுவரை உங்களுக்கு தெரியாத முக்கிய தகவல்….!!!!

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரி கட்டுவது அவசியமா?. வருமான வரியின் நிர்வாக அமைப்பு என்ன என்பதை நீங்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வருமானவரி என்றால் என்ன?
வருமான வரி என்பது ஒவ்வொரு நபரின் வருமானத்தில் மீதும் இந்திய அரசு விதிக்கும் வரி ஆகும். இதனை கையாளுவது தொடர்பான விதிமுறைகள் வருமான வரி சட்டம் 1961 இல் உள்ளது.

வருமான வரியின் நிர்வாக அமைப்பு:
இந்திய அரசின் வருவாய் விவகாரங்களை நிதி அமைச்சகம் கையாளுகின்றது. வருமான வரி மற்றும் செல்வ வரி ஆகிய நேரடி வரி விவகாரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் கவனித்து வருகிறது. நிதியமைச்சகத்தின் ஒரு அங்கமாக வருவாய்த் துறைக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் செயல்பட்டு வருகின்றது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி தொடர்பான விவரங்களை வருமான வரித்துறை வைத்து கண்காணிக்கிறது. மேலும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கண்காணிப்பில் வருமான வரித் துறையால் வருமான வரிச்சட்டம் நிர்வகிக்கப்படுகின்றது.

யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும் தெரியுமா?
தனிநபர்கள் அனைவரும் கட்டாயம் வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள், தனிநபர் சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் LLP உள்ளிட்டோர் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது அவசியம்.

வருமானவரி எப்படி வசூலிக்கப்படுகிறது?
மூன்று வழிகளில் அரசு வருமான வரியை வசூல் செய்கிறது. ஒன்று குறிப்பிட்ட வங்கிகளில் வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி செலுத்த வேண்டும். இரண்டு, Taxes deducted at source [TDS] மூலமாக வரி வசூலிக்கப்படும். மூன்று, Taxes collected at source [TCS] மூலமாக வசூலிக்கப்படும்.

வரி செலுத்துவது மக்களின் பொறுப்பா?
ஒவ்வொரு நபரும் தனது வருமானத்தை கணக்கிட்டு வருமான வரியை சரியாக செலுத்த வேண்டியது அரசியல் அமைப்பு கடமை ஆகும்.

Categories

Tech |