வருமானவரி செலுத்தியவர்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டிய ரீபண்ட் பெறுவதில் இனி எந்த தாமதமும் இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தியவர்களின் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பொதுவாகவே வருமான வரி தாக்கல் செய்த நீண்ட நாட்களுக்கு பிறகு தான் நமக்கு தொகை கிடைக்கும். இனி மிக விரைவில் கிடைத்துவிடும். சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானத்திற்கான வரியை பிடித்தம் செய்து விட்டு மீதமுள்ள தொகை ஊதியமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
அதனால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு முன்னரே நாம் வருமான வரியை கட்டுகிறோம். ஆனால் ஐடி.ஆரைதாக்கல் செய்யும்போது நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டால் 90 நாட்களில் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும். தாக்கல் செய்யப்படும் வருமானவரி கணக்கு மிக தெளிவானதாக எந்த இடையூறும் இல்லாத வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நீங்கள் கட்டிய உபரி வரி உடனடியாக திரும்ப கிடைத்துவிடும்.
அனைத்து புள்ளி விவரங்களும் சரியாக இருந்தால் வருமானத்தை தாக்கல் செய்த 90 நாட்களுக்குள் உங்கள் நிலுவைத் தொகையை உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதுமட்டுமன்றி நீங்கள் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் மிகச் சரியானதாக இருந்தால் 90 நாட்களுக்குள் உங்கள் பணத்தை திரும்ப பெற்றுவிடலாம். இது தொடர்பாக வருமான வரித்துறை இந்த வருடம் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி உள்ளது. அதன் மூலம் இனிமேல் 90 நாட்களில் பணத்தை திரும்பப் பெறுவதே சாத்தியம்தான் என்று வருமான வரித்துறை உறுதியளித்துள்ளது.