வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “வருமுன் காப்போம்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம் .பி செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் ரத்தினகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் எம்.பி. செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர்.