Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரும்முன் காப்போம்” திட்ட முகாம்…. கலந்துகொண்ட 1,036 பேர்…. சிகிச்சை அளித்த மருத்துவர்கள்….!!

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர் கிராமத்தில் வைத்து தமிழக அரசின் “வரும் முன் காப்போம்” திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் யூனியன் சேர்மன் சின்னையா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, கவுன்சிலர் ராமு, சுப்பையா,மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மாத்திரைகளை வழங்கியுள்ளார். மேலும்   இந்த முகாமில்  1,036  பேர் கலந்து கொண்டனர். இதனையடுத்து  மருத்துவர்கள்  39 பேருக்கு ஸ்கேன் பரிசோதனை மற்றும் 35 பேருக்கு இ.சி.சி.யும்  பரிசோதனையும் செய்துள்ளனர்.

Categories

Tech |