Categories
தேசிய செய்திகள்

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்…. PF கணக்கில் அதிரடி மாற்றம்….!! மத்திய அரசு அறிவிப்பு….!!

தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தொழிலாளர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இபிஎஃப் திட்டம் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகைகளிலும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது. அதோடு தொழிலாளர்கள் இபிஎப் சேவையின் மூலம் தங்களது முதிர்வு காலத்தை சிரமமின்றி கழிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து இபிஎஃப் கணக்குகளும் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஎப் ஆண்டுக்கு ரூபாய் 2.5 லட்சத்தை தாண்டினால் அதன் மூலம் வரும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஎப் வரி விதிப்புக்கு உட்பட்ட பாகம் வரி விதிப்புக்கு உட்படாத பாகம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |