புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் ஒன்று. இந்த கோவிலில் பங்குனி மாதம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் பங்குனி திருவிழா நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிந்து வரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.