Categories
அரசியல்

“வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு”…. வன உயிர் பாதுகாப்பு சட்டம் பற்றிய சில தகவல்கள் உங்களுக்காக….!!!!

நம் நாட்டில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திரதின விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் முக்கியமான சட்டங்களில் ஒன்றான வன உயிர் பாதுகாப்பு சட்டம் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

வன உயிர் பாதுகாப்பு சட்டம்

வனஉயிர் பாதுகாப்புச் சட்டம் 1972-ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றம் மூலம் இயற்றப்பட்ட ஒரு சட்டம் ஆகும். இந்த சட்டம் வன உயிர்களான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கிறது. 1972 ஆம் வருடத்திற்கு முன்பு இந்தியாவில் 5 தேசியப்பூங்காக்கள் மட்டும்தான் இருந்தது. மற்ற சீர்திருத்த நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது இந்த சட்டத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட அட்டவணைப் பட்டியல்கள் இருக்கிறது.

உயிர்இனங்களை வேட்டையாடுதல் மற்றும் அவை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய ஒரு குற்றம் ஆகும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது. மேலும் இணைக்கப்பட்ட துணைநடவடிக்கைகள் (அல்லது) இடைப்பட்ட மற்ற நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும் இந்த சட்டம் பொருந்தும். சம்மு காசுமீரைத் தவிர்த்து இந்த சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதில் சம்மு காசுமீரில் அம்மாநிலத்திற்கு என தனிசட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சட்டத்தில் 6 பட்டியல்கள் இருக்கிறது. பட்டியல் I மற்றும் பட்டியல் II முற்றும் பாதுகாக்கப்பட்டவை ஆகும். இப்பட்டியல்களிலுள்ள உயிரினங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு இந்த சட்டம் கடும் தண்டனைகளை வழங்குகிறது. இதையடுத்து பட்டியல் III மற்றும் பட்டியல் IVல் உள்ள இனங்களுக்கு ஊறு விளைவிப்போருக்கு சற்றுக் குறைவான தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதுவும் பாதுகாக்கப்பட்டவை ஆகும். அதன்பின் பட்டியல் V-ல் உள்ள விலங்குகள் மட்டும் வேட்டையாட அனுமதிக்கப்படுகிறது. அடுத்ததாக பட்டியல் vI-ல் உள்ள தாவரங்கள் வளர்க்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

பிரிவு-9 வேட்டையாடுதல்

இந்த பிரிவின் வாயிலாக வேட்டையாடுதல் தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுகிறது. வன விலங்குகளுக்கு ஊறுவிளைவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு வனத் துறை, காவல்துறை, மத்திய புலனாய்வு பிரிவு, வனஉயிர் குற்றத்துடப்புத்துறை போன்றோருக்கு அதிகாரம் வழங்குகிறது. ஏப்ரல் 2010 வரை இந்த சட்டத்தின் கீழ் புலிகள் மரணம் குறித்து மொத்தம் 16 குற்றவியல் தீர்ப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேட்டை(பிரிவு 9)

Categories

Tech |