இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-26618438, 044-26618039 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.