Categories
மாநில செய்திகள்

வரும் ஜூன் 3 ஆம் தேதி…. “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது”… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய சாதனையாளருக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்த் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை” 2022 ஆம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு வருடமும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ஏதுவாக விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர் / நடிகர் சங்கத்தலைவர் நாசர், கரு.பழனியப்பன் உறுப்பினர்களாகவும் தேர்வுக் குழுவினை அமைத்து   ஆணையிடப்பட்டுள்ளது. தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூபாய் 10 லட்சம் மற்றும் நினைவுப்பரிசு போன்றவற்றினை முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிப்பார்.

Categories

Tech |