மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டுமாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப் போகிறது. அந்த வகையில் ஜூலை முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில்(DA) 4 % உயர்த்த நிர்ணயிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பணவீக்க தரவு வெளியாகிய பின், DA-வை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பாக ஜனவரி-பிப்ரவரி மாத தரவுகளின் அடிப்படையில் ஜூலையில் DA அதிகரிப்பு இருக்காது எனஅஞ்சப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 2022-ல் வெளியிடப்பட்ட ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் இருந்து, அகவிலைப்படியில் (DA உயர்வு) குறைந்தபட்சம் 4 சதவீத அதிகரிப்பு இருக்கும் என்பது தெளிவாகிறது.
மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் வேகமாக அதிகரித்த குறியீட்டெண், DA-ல் 5 சதவீத அதிகரிப்பு இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் 4 சதவீதத்திற்கும் அதிகமானவை மே 2022-ன் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும். இதனிடையில் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல்மாத ஏஐசிபிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்தில் 126 புள்ளிகளிலிருந்து 2022 ஏப்ரலில் 127.7 ஆக அதிகரித்து இருக்கிறது. அதனடிப்படையில் 1.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அத்துடன் பணவீக்கம் மார்ச்சில் 126 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும் இருந்தது. அதேபோன்று பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் வரை குறியீட்டு எண் 2.7 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனடிப்படையில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது அரசாங்கம் DA-யை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. மேலும் ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் இருப்பவர்களுக்கு எவ்வளவு நன்மை?
# பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000
# இப்போதுள்ள அகவிலைப்படி (34%) மாதம் ரூபாய் 6120
# புது அகவிலைப்படி (38%) மாதம் ரூபாய் 6840
# அகவிலைப்படி உயர்வு 6840- 6120 =மாதம் ரூபாய் 720
# வருடத்திற்கு எவ்வளவு லாபம் 720X12 = ரூபாய் 8640
அதிகபட்சம் அடிப்படை சம்பளம் இருப்பவர்களுக்கு எவ்வளவு நன்மை வழங்கப்படும்?
# பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூபாய் 56900
# இப்போதுள்ள அகவிலைப்படி (34%) மாதம் ரூபாய் 19346
# புது அகவிலைப்படி (38%) மாதம் ரூபாய் 21622
# அகவிலைப்படி உயர்வு 21622-19346 =மாதம் ரூபாய் 2276
# வருடத்திற்கு எவ்வளவு லாபம் 2276 X12 = ரூபாய் 27,312