தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் தொடர்ந்து தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மூன்று நாட்களுக்குப் பின் உண்மை நிலவரம் தெரியவரும். தொற்று குறைந்தால் ஊரடங்கு அமல்படுத்த அவசியம் இருக்காது என தெரிவித்துள்ளார்.அதனால் இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்தால் வரும் வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது