நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்பதால், முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தடுப்பூசி போடும் பணிகள் மட்டும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.