Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வரும் தேர்தலில் போட்டி ? தெருக்களில் மலரும் தாமரை…. உறுதி மொழி எடுத்த குஷ்பு …!!

சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

128 கோடி மக்கள் ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே தலைவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயமாக பல காரணம் இருக்கும். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது எங்களுடைய வேலை ஆளும் கட்சியை எதிர்ப்பது தான். ஆளும் கட்சி எது செய்தாலும், அதில் தவறைக் கண்டு பிடித்து விட்டு, தப்பு தான் சொல்ல வேண்டும், இதுதான் என்னுடைய கொள்கை. அதே போல நானும் என் வேலை பார்த்துட்டு இருந்தேன்.

பிரதமர் மோடி அவர்கள் சமீபத்தில் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு நான் சப்போர்ட் செய்துள்ளேன், பிரதமரை வளத்தியுள்ளேன். எதிர்க்கட்சியில் இருக்கும் போது எதிர்க்கவேண்டும் என்பதற்காக எதிர்க்க கூடாது, ஒரு தீர்வு கொடுக்க வேண்டும். எந்த ஒரு திட்டங்கள் வேண்டாம் என்று சொல்கிறார்களோ… அத்தனை திட்டமும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது தான்.  அதனால் பாஜக  கொண்டு வரும் திட்டத்தில் சிறிய தவறு கண்டுபிடித்து அதை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நேத்துதான் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன். எனக்கு முன்னாடி பல தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த கட்சியில் இருக்கிறார்கள். நான் தேர்தலில் போட்டிகள் குறித்து பாஜக தலைமை தான் முடிவு எடுக்கும்,  நான் எந்த பதவியும் விரும்பவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர பாடுபடுவேன் எனும் உறுதிமொழியுடன் பாஜகவில் சேர்ந்து உள்ளேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |