Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வரும் நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பகுதியாக நிலவி  வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். அதன் பின் மேற்கு ,தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகள் தமிழக கடலோர பகுதிகள் குமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் சுமார் 100 படகுகள் மீன் பிடிக்க சென்றுள்ளது. இதனையடுத்து இந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |