பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் வருகின்ற பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் தாக்கல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி மாதம்1 ஆம் தேதி காலை 11 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டாலும் பட்ஜெட் தாக்கல் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி சிறு குறு வியாபாரிகள் விவசாயிக்கு சாதகமான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.