வருகிற அக்டோபர் மாதம் துவங்க இன்னும் சில தினங்களே இருக்கிறது. அக்டோபர் 1 முதல் அரசால் மாற்றப்பட்ட பல்வேறு விதிகள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது சாமானியர்களின் நிதிநிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அனைவரும் இம்மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். டிமேட் கணக்குகளில் 2 காரணி அங்கீகாரம் (டூ ஃபாக்டர் அதண்டிகேஷன்), அடல் பென்ஷன் திட்டம், மியூச்சுவல் பண்டுகளில் நியமனம், கார்டு டோக்கனைசேஷன் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி போன்றவை அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்களில் அடங்கும்.
இம்மாற்றங்கள் தொடர்பான விபரங்களை தெரிந்துகொள்வோம். வரும் 30, 2022-க்குள் டிமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இருகாரணி அங்கீகாரத்தை செய்து முடிக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. டீமேட் கணக்கு வைத்திருப்போர் கடைசி தேதிக்கு முன்பு 2 காரணி அங்கீகாரத்தைச் செய்யவில்லை எனில், அக்டோபர் 1 முதல் தங்களது கணக்கில் லாக்-இன் செய்ய இயலாது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புது விதியின்படி தற்போது மியூச்சுவல்பண்டுகளில் முதலீடு செய்வோர் அக்..1ஆம் தேதியில் இருந்து நாமினேஷன் விபரங்களை அளிக்கவேண்டும்.
ஒரு முதலீட்டாளர் அவ்வாறு செய்ய தவறினால், அவர் நாமினேஷன் செய்யும் வசதியைப் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிடும் ஒரு படிவத்தை நிரப்பி அளிக்கவேண்டும். மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களில் முதலீட்டாளர்கள் நாமினேஷனை செய்வதற்கு பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் என ஆப்ஷன்களையும் வழங்கவேண்டும் என தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. பிசிக்கலாக இதனை செய்யும் போது முதலீட்டாளர்கள் படிவத்தை நிரப்பி கையொப்பமிட வேண்டும். அதே சமயத்தில் டிஜிட்டல் முதலீட்டாளர்கள் மின் கையொப்பம்இட வேண்டும். அடல் பென்ஷன் யோஜனா குறித்த விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது நாட்டில் வருமானவரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்ய இயலாது. இவ்விதி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. முன்பாக 18 -40 வயது வரையுள்ள எந்தஒரு சாதாரண குடிமகனும் அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்யலாம் என இருந்தது. 60 வருடங்களுக்கு பின், அரசாங்கத்தால் மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அக்டோபர் 1, 2022 முதல் நாட்டில் டோக்கனைசேஷன் முறை நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
அதற்குபின் எந்த ஒரு ஈ-காமர்ஸ் (அல்லது) பேமெண்ட் கேட்வேவும், உங்களது அட்டைத் தகவலைச் சேமிக்க இயலாது. இது வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யும் அபாயத்தை குறைக்கும். நாட்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம். ஏனெனில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பின் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அத்தகைய நிலையில் 30 செப்டம்பர் 2022 அன்று, வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு பெரியமுடிவு எடுக்கப்படலாம்.