Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரும் 10ஆம் தேதி…. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை…. இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிச் சேவைகள், காப்பீடு, மருத்துவம், தொலைத்தொடர்பு, உணவுத்துறை, கட்டுமானம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமில், 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Categories

Tech |