Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி 9 மணிக்கு தீர்ப்பு….. 9:15 அதிமுக பொதுக்குழு நடக்குமா?….. பெரும் பரபரப்பு…!!!

ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொது குழு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த போது 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் வருகிற ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு காரசாரமான விவாதங்களை முன்வைத்தது. இரு நாட்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகின்றது. நீதிபதிகள் தொடர்ந்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர். நீதிபதியின் கேள்விக்கு இன்று எடப்பாடி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு பிறப்பிக்க உள்ளதாக சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு காலை 9:15 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு 15 நிமிடங்களுக்கு முன்பாக வெளியாகும். இதனால் ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து அதிமுக பொது குழு கூட்டம் நடக்குமா? இல்லையா? என்பது தெரியவரும். நீதிபதி வழங்கப் போகும் இந்த தீர்ப்பு இருதரப்பினர் இடையே உச்சகட்டை எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Categories

Tech |