Categories
தேசிய செய்திகள்

வரும் 12-ஆம் தேதியன்று…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு  பற்றிய தகவல்கள்  வெளியாகியுள்ளது.

நாடு  முழுவதும்  கொரோனா  தொற்று  காரணமாக  பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள்  அறிவித்து வருகிறது. அந்த வகையில்   கேரள  மாநிலத்திலும்  பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள  நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு 12ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்  நடை  திறப்பானது  தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவின்  முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி  அவர்களால்  நிகழ்த்தப்படும் எனவும், அந்த தினத்தன்று வேறு  சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது எனவும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் இந்த சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் 17ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும். அதன் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது .

இது  குறித்து  இன்னும் ஒருசில தினங்களில் முடிவு செய்யப்பட  வேண்டும்  என்று   திருவிதாங்கூர்  தேவசம்போர்டு  அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளார்கள். இதில் மண்டல மற்றும்  மகரவிளக்கு பூஜை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |