நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் சில முக்கிய பூஜைகளின் போது மட்டும் நடை திறக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற 15ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.