Categories
தேசிய செய்திகள்

வரும் 16 ஆம் தேதி முதல்…. பள்ளிகள் திறப்பு நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிற சூழலில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தை குறைக்க அம்மாநில பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 16 புதன்கிழமை தொடங்கி மாநிலத்தில் பள்ளிகள் காலை 7:45 முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு மே 20 அன்று கடைசி வேலை நாள் வரை தற்போது அறிவித்துள்ள நேரத்தில் தான் பள்ளிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற ஜூன் 12ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோடைகாலம் நெருங்கி வருவதால் அதிகபட்சமாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நேர அட்டவணை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது மாணவர்களின் உடல் நலன் கருதி இந்த முடிவினை மாநில அரசு எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |