Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வரும் 18ஆம் தேதி கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் – வரிகளை உயர்த்த மத்திய அரசு முடிவா???

டெல்லி: டிசம்பர் 18ஆம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி பாக்கி, வரி வருவாய் ஆகியன கருத்திற்கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை கணிசமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் மத்திய அரசு எதிர்பாா்த்த அளவைவிடக் குறைந்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டையும் மத்திய அரசு வழங்கவில்லை. இந்தச் சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் டெல்லியில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது.

ரூ.1,200 செல்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை

இந்தக் கூட்டத்தில் அரசின் வரி வருவாயில் இழப்பு, 50 ஆயிரம் கோடி வரி நிலுவைத் தொகை ஆகியன கருத்திற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதனால் பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது 5, 12, 18, 28 விழுக்காடு எனப் பிரித்து சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது. சில பொருள்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி.!

ஆனால், வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், தற்போது 5 விழுக்காடு வரி வரம்புக்குள் உள்ள பொருள்களுக்கு 8 விழுக்காடாகவும், 12 விழுக்காடு வரி வரம்புக்குள் உள்ள பொருள்களுக்கு 15 விழுக்காடாகவும் வரியை உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ஜிஎஸ்டி வருவாய் குறைவு!

சில பொருள்களின் மீதான ‘செஸ்’ வரியை உயா்த்துவது தொடா்பாகவும், சரக்கு மற்றும் சேவை வரி விலக்கப்பட்ட பொருள்கள் குறித்து மறுஆய்வு செய்வது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்  ஜிஎஸ்டி வரி உயர்வு  gst counsil meet dec 18  RS 50k cr dues pending  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

 

நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) வருவாய், ரூ.3.28 லட்சம் கோடியாக இருந்தது. இது நிதிநிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 40 விழுக்காடு குறைவாகும். இதே 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.6.03 லட்சம் கோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட வேண்டுமென இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.4.57 லட்சம் கோடி மட்டுமே வருவாய் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |