ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பையொட்டி அங்கு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் வரும் 18ம் தேதி முதல் 31-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.