தமிழகத்தில் கொரோனா 3-வதுஅலை தாக்கத்திற்கு பின் கடந்த மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாகவும் பணியாற்றினர். இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தலுக்கு பின் வழக்கம்போல மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுத் தேர்வுக்கான காலஅட்டவணையும் வெளியாகி உள்ளது. அதன்பின் பிற வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு கால அட்டவணை, செய்முறை தேர்வு தொடர்பான அட்டவணைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு தேர்வு தேதிகள் வெளியாகி இருப்பதை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார்.