Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

வரும் 20ஆம் தேதி…! முதல்வர் ஸ்டாலினுடன்….. தெறிக்கவிட போகும் CSK டீம் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தலைமையிலான அணியினருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நான்காவது முறையாக கோப்பையை வென்ற அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது. மகேந்திர சிங் தோனி என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனும் சிஎஸ்கே வீரர்கள் சென்னை திரும்பியதும் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |