Categories
தேசிய செய்திகள்

வரும் 2047ஆம் வருடத்திற்குள்…. அதிக வருவாய் உடைய நாடாக இந்தியா மாறணும்…. அமிதாப் காந்த்…..!!!!!

வரும் 2047ஆம் வருடத்திற்குள் இந்தியா அதிகமான வருவாய் உடைய நாடாக மாற வேண்டும் என்று நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தாா்.

இது தொடர்பாக அவா் மேலும் கூறியதாவது “வருகிற 2047-ஆம் வருடத்திற்குள் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு நீடித்த பொருளாதார வளா்ச்சி என்பது மிக முக்கியமானது ஆகும். இந்தியாவின் தனி நபா் வருமானம் என்பது சுமாா் 2,000 டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ.1.50 லட்சம்). இதனிடையில் இந்தியா குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருக்கிறது. தனியாா்த் துறையின் அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ளப்படும் பட்சத்தில் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடாக உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்ற 1947ல் தென் கொரியா, சீனா மற்றும் இந்தியா போன்றவற்றின் தனிநபா் வருவாய் என்பது ஏறக்குறைய சமமாகவே இருந்தது. ஆனால் 75 வருடங்களுக்கு பின் தென்கொரியாவின் தனிநபா் வருமானம் இந்தியாவைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு சீனா மற்றும் தென்கொரியா ஒவ்வொரு ஆண்டும் 10 % வளா்ச்சியை பதிவு செய்ததே முக்கிய காரணம் ஆகும். இந்தியா அதிகமான விகிதத்தில் வளா்ச்சி அடையாவிட்டால் குறைந்த வருமான வளா்ச்சி சுழலில் சிக்கவேண்டியிருக்கும்” என்று அவா் கூறினார்.

Categories

Tech |