மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்தம், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தொடர் போராட்ட காரணமாக திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் வேளாண்மை பொருள்களுக்கு குறைந்தபட்சம் ஆதரவு விலைக்கான குழுவை நியமிப்பது, விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
தற்போது சம்யுக்த கிசான்மோர்ச்சா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது வாக்குறுதிகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, 21ஆம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.